குட்டி இங்கிலாந்தில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்

குட்டி இங்கிலாந்தில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல், கொடுப்பனவுகளை வழங்குதல் உள்ளிட்ட பல அவசர பிரச்சினைகள் தொடர்பாக இன்று (18) முதல் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நாடளாவிய அஞ்சல் சேவைகள் வேலைநிறுத்தத்துடன் இணைந்து குட்டி இங்கிலாந்து எனப்படும் நுவரெலியா வரலாற்றுச் சிறப்புமிக்க தபால் அலுவலகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

காலையில் எந்தத் தபால் ஊழியரும் வேலைக்கு வரவில்லை, காலையில் தபால் அலுவலகமும் தபால் அறையும் மூடப்பட்டிருந்ததன.

தபால் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து தபால் அலுவலக கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நுவரெலியா வரலாற்றுச் சிறப்புமிக்க தபால் அலுவலகம் மூடப்பட்டதால், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் பல சுற்றுலா சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

குட்டி இங்கிலாந்தில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்