பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுக்கும் இபோச பஸ்கள் குறித்து கினிகஸ்தேனை பகுதி மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றார்கள்.
முன் கூட்டியே பணம் செலுத்தி ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் பெறப்பட்ட பருவகால சீட்டினை வைத்திருக்கும் கினிகத்தேன பகுதியில் உள்ள பிரபல சிங்கள கினிகத்தேன சென்றல் கொலேஜ் , விக்னேவரா தமிழ் வித்தியாலயம் அப் பகுதியில் உள்ள ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு அநீதி இடம் பெற்றுள்ளது.
இது குறித்து பாடசாலை மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் காலை வேளையில் அரசு பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால், தனியார் பேருந்துகளில் அதிகளவு பணம் கொடுத்துச் செல்ல வேண்டி உள்ளது.
மாலை வேளையில் பாடசாலை நிறைவு பெற்று 2 மணிக்கு மேல் அவ்வீதியூடாக வரும் அரச பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதால் நடை பயணமாக இல்லங்களுக்குச் செல்ல வேண்டி உள்ளது.
இதனால் முன்கூட்டியே பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்ட பருவகால சீட்டால் பயன் இல்லை எனக் கூறுகின்றனர்.
மாணவர்களை ஏற்ற மறுக்கும் இபோச பஸ்கள் குறித்துச் சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள், போக்குவரத்து அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
