தாக்குதலுக்கு இலக்கானவருக்கு நீதி வேண்டும்

தாக்குதலுக்கு இலக்கானவருக்கு நீதி வேண்டும் என்று சாமிமலை கவரவிலை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை கவரவிலை தோட்ட த்தைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் கடந்த 30ஆம் திகதி அன்று சாமிமலை நகரில் சில நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

அவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகப் பேராதனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சந்தேக நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும் என்று கவரவிலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாமிமலை செ. ஞானராஜ்