இன்றும் மழையுடனான காலநிலை நிலவும்

இன்று இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா ஆகிய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்பிரகமுவை மாகாணங்களிலும், காலி, மாத்தறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாகப் பலத்த காற்றும் மின்னல் தாக்கமும் ஏற்படும். .வற்றின் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது