இந்தியாவில் இந்தி கற்க 35 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்பது மாத கற்கை நெறியாக 2025 ஓகஸ்ட் முதல் 2026 மே மாதம் வரை நடைபெறும் இந்தி கற்கைக்கு இந்திய அரசாங்கம் முழுமையாகப் புலமைப் பரிசில் மூலம் நிதி வழங்குகிறது.
இலங்கையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 35 மாணவர்களுடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கடந்த வாரம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.





தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுள் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து 17பேரும், கொழும்பு கல்கலைக் கழகத்தின் ஶ்ரீபாளி வளாகம், ரஜரட்ட பல்கலைக் கழகம் ஆகியவற்றிலிருந்து தலா நால்வரும்
களனி பல்கலைக் கழகம், சுவாமி விபுலானந்தா கல்லூரி ஆகியவற்றிலிருந்து தலா இருவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சுவாமி விபுலானந்தா கல்லூரியும் இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து இந்தப் புலமைப் பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
கடந்த 13 ஆண்டுகளாக சுமார் 200 மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 35 ஆசிரியர்களுக்கு ஆக்ராவில் இந்தி பயிற்றப்பட்டுள்ளது. இம்முறை இந்தியாவில் இந்தி கற்க 35 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய உயர்ஸ்தானிகராலயம், கொழும்பு
