தலைவர் இறப்பை பகிரங்கமாக ஏற்கத் தயாராகும் புலி ஆதரவாளர்கள்

முள்ளிவாய்க்கால்: கோப்புப் படம்

தலைவர் இறப்பை பகிரங்கமாக ஏற்கத் தயாராகும் புலி ஆதரவாளர்கள் சுவிட்சர்லாந்தில் நாளை (ஓகஸ்ட் 02) நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைவரின் இறப்பை பல ஆண்டுகளாக மறுத்தவர்கள் முதற்தடவையாகப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்காக இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருப்பதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

தலைவர் இறந்து 15 ஆண்டுகள் கடந்திருக்கும் தறுவாயில், அவர் இறந்துவிட்டார் என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்காக முன்னாள் புலிகள் இயக்கத்தினரும் புலம்பெயர் தமிழ் மக்களும் சுவிட்சர்லாந்தில் ஒன்று கூடுகிறார்கள் என்று பெடரல்.காம் இணையத்தளம் கூறுகிறது.

பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்களும் வேறு நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் இணைந்து புதிதாக ஸ்தாபித்துள்ள -பிரபாகரன் ஞாபகார்த்த எழுச்சிப் பேரவை – அமைப்பின் மூலம் இந்த ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகவும் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

தலைவர் இறப்பை பகிரங்கமாக ஏற்கத் தயாராகும் புலி ஆதரவாளர்கள், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று சுமார் 15 ஆண்டுகளாகக் கூறிவந்த நிலையில், தற்போது அவரது இறப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.