அமெரிக்கா இலங்கைக்கான வரியை 20வீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இன்று 2025 ஒகஸ்ட் முதலாந்திகதி முதல் அமலுக்கு வரவிருந்த இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான 30% தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா 20% ஆகக் குறைத்துள்ளது.
வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்படும் வரி வீதங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.
தெற்காசிய நாடுகளான பங்களாதேஷுக்கு 35% இலிருந்து 20% ஆகவும், பாகிஸ்தானுக்கு 30% இலிருந்து 19% ஆகவும் வரி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரி வீதம் 27% ஆகவே நீடிக்கிறது. இது மாற்றப்படவில்லை.
பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட 50% வரி வீதம் 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலுக்கு விதிக்கப்படும் வரி வீதம் 15% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட வரி வீதங்களில் மிக உயர்ந்த வீதமாக சிரியாவுக்கு 41% வரி விதிக்கப்படுகிறது.
அதேவேளை லாவோஸ், மியான்மாருக்கு தலா 40% வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகையின் அறிக்கை தெரிவிக்கிறது.

