மேல் மாகாண பிரதம செயலாளர்

மேல் மாகாண பிரதம செயலாளர் பதவிக்குப் புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் திரு. புஷ்பகுமாரவிடம் கையளித்தார்.