ரஷ்யா வழங்கிய இக்லா ஏவுகணை!

ரஷ்யா வழங்கிய இக்லா ஏவுகணை! ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அவசர கொள்முதல் செய்துள்ள இக்லா-எஸ் ஏவுகணையின் சிறப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ராணுவம், ரஷ்யாவிடம் இருந்து அவசரமாக கொள்முதல் செய்துள்ள இக்லா-எஸ் என்ற ஏவுகணையின் சிறப்பம்சம் என்ன என்று பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இராணுவ வீரர் ஒருவரே ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு சுமந்தும் சென்று விடலாம். விண்வெளியில் இருக்கும் இலக்கு நோக்கி எளிதில் ஏவி தாக்குதல் நடத்த முடியும்.

ரஷ்யா வழங்கிய இக்லா ஏவுகணை

விண்வெளியில் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானம், டிரோன், ஹெலிகாப்டர் போன்றவற்றைக் குறி பார்த்துத் தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற ‘இன்ப்ரா ரெட் ஹோமிங்’ வசதி இதில் உள்ளது.

ரஷ்யா வழங்கிய இக்லா ஏவுகணை யை, ஒரு முறை இலக்கு மீது குறி வைத்து ஏவி விட்டால் போதும்; குறி வைக்கப்பட்ட விமானம் அல்லது ஹெலிகாப்டர் அல்லது டிரோனின் இன்ஜின் வெப்பத்தை உணர்ந்து பின்தொடர்ந்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

இந்திய ராணுவத்திடம் ஏற்கனவே இக்லா ஏவுகணைகள் உள்ளன. அவற்றில் நவீன வசதிகள் சேர்க்கப்பட்டது தான் இந்த இக்லா எஸ் என்கின்றனர் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள்.

பழைய இக்லா ஏவுகணைகளும், தற்போதைய தேவைக்கு தகுந்தபடி இந்திய நிறுவனம் மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற நிலையில், இந்த ஏவுகணைகள் இந்திய இராணுவத்தின் எல்லையோர முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.