Blog

வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டம்
பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78...
இலண்டனிலிருந்து மும்பாய் வரவிருந்த ஏர்இந்தியா 787 ரக விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை கண்டறிந்த விமானியால் அனர்ததம் தவிர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலண்டன் ஹீத்று விமான நிலையத்திலிருந்து திங்கள் இரவு 9.05இற்கு மும்பாய் புறப்படவிருந்த விமானத்தை இயக்குவதற்கு முன்னர் இரு விமானிகளில் ஒருவர் எரிபொருள் சுவிட்சை (ஆளியை) சோதித்தபோது அது RUN நிலையில் நிற்காமல் CUT OFF நிலைக்கு நழுவியுள்ளது. இரண்டு முறை அவ்வாறு நழுவிய சுவிட்ச் மூன்றாவது முறையே சரியாகியுள்ளது. அதன் பின்னர் இரவு 9.40 இற்கு இந்த ஏஐ132 விமானம் மும்பாய் வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரைநிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜூன் 12 ஆம் திகதி அஹமதாபாத்தில் 260 பேர் உயிரிழந்த விபத்துக்குக் காரணம் எரிபொருள் சுவிட்ச் கட் ஓப் நிலைக்குச் சென்றமை என்று கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது. ஏர் இந்தியா 787 விமானத்தின் எரிபொருள் சுவிட்ச் தன்னியக்கமாகச் செயல்படாது என்றும் அதனை கட் ஓப் நிலைக்குக் கொண்டு செல்ல ஒருவர் இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனால், விமானிகளில் ஒருவர்தான் சுவிட்சின் நிலையை மாற்றியிருக்க வேண்டும் என்றும் ஊகிக்கப்பட்டது. எனினும், இலண்டனில் ஏற்பட்டுள்ள சம்பவத்தில் எரிபொருள் சுவிட்ச் கட் ஓப் நிலைக்குத் தானாக நழுவிச்சென்றதை விமானி அறிந்து விசனத்துடன் முறைப்பாடு செய்துள்ளார். விமானியின் கரிசனையைக் கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏர்இந்தியா நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்திருப்பதாக இந்தியா ருடெ செய்தி தெரிவிக்கின்றது.
இலண்டனிலிருந்து மும்பாய் வரவிருந்த ஏர்இந்தியா 787 ரக விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை கண்டறிந்த விமானியால் அனர்ததம் தவிர்க்கப்பட்ட...
சட்டத்தரணியின் வாகனத்தை தாக்கிய பெண்கள் இருவர் கைது
நுகேகொடையில் வழக்கொன்றில் ஆஜராகிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த சட்டத்தரணயின் கவாகனத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பெண்கள் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்....
ஒன்பது முறை பட்ஜட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் சாதனை
இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை புரிந்துள்ளார். இந்திய...
சட்டத்தின் ஆட்சி வலுப்பட வேண்டும்
முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை...
சாரதியின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்ட பஸ் விபத்து
வலப்பனை நில்தண்டாஹின்ன பகுதியில் 50 அடி பள்ளத்தில் உருண்டு ஏற்படவிருந்த விபத்தை பஸ்ஸின் சாரதி தன் சாமர்த்தியத்தால் தடுத்து...
நெடுங்கேணியில் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக போராட்டம்
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.  நெடுங்கேணி...
திருமலை கடற்கரையில் புத்தர் சிலை: பிக்குகளுக்கு விளக்க மறியல் நீடிப்பு
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்ங்கொடை கஸ்ஸப தேரர்...
நெல்லிக்காடு நாகன்னி அம்மன் ஆலயத்தில் நெற்புதிர் பூஜை
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று நெல்லிக்காடு நாகன்னி அம்மன் ஆலயத்தில் இன்று(01.02.2026)ஆம் திகதி காலை 10மணிக்கு நடைபெறும் “நெற்புதிர் எடுத்தல்”...
வரவுசெலவுத் திட்டம் நிறைவேறாததால் அமெரிக்க அரசாங்கம் முடக்கம்
வரவுசெலவுத் திட்டம் நிறைவேறாததால் அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம், இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்குக் குறிக்கப்பட்ட அவகாசத்துக்குள் ஒப்புதல்...