
மதிமுரசு இணையத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
இலங்கையிலிருந்து வெளிவருகின்ற இன்னோர் இணையத்தளமாக அன்றித் தனித்துவமான தமிழ் நடையுடன் கற்றோரையும் கற்போரையும் கவரும் வகையில் ஓர் எடுத்துக்காட்டான இணையத்தளமாக விளங்க விரும்புகின்றோம்.
2000ஆம் ஆண்டில் மாதாந்த அச்சு இதழாக கல்வியாளர் குழாத்தினரை ஆசிரியபீடமாகக் கொண்டு மதிமுரசு வெளிவந்தது.
பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எனப் பலதரப்பட்ட அறிஞர்கள் மதிமுரசு செய்தி இதழுக்குப் பக்கபலமாக இருந்தார்கள்.
சமூகத்தில் மறைந்து கிடந்த பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்த மதிமுரசு இதழில் மாணவர்களின் ஆக்கங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது. அதனால், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மதிமுரசு தடம்பதித்தது.
எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கும் ஏற்படுகின்ற நெருக்கடி மதிமுரசுவையும் விட்டுவைக்கவில்லை. அதனால், 2022 இல் மதிமுரசு (mathemurasu.com) இணைய பதிப்பாக வெளிவந்தது.
எனினும், அதுவும் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆதலால், 2025 முதல் மீண்டும் மதிமுரசு.எல்.கே (https://www.mathemurasu.lk) வடிவில் வந்துகொண்டிருக்கிறது.
மதிமுரசுவில் வெளி வரும் செய்திகள்,ஆக்கங்களை முடிந்தவரை தூய தமிழில் வழங்க வேண்டும் என்பது எமது நோக்கம். அதற்காகப் பல கல்வியாளர்கள், முனைவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் கரம் கோத்திருக்கின்றோம்.
எமது சமூக வலைத்தளப் பக்கங்கள் ஊடாக நீங்களும் எங்களுடன் இணைந்துகொள்ளலாம்.
உங்களின் மேலான ஆலோசனைகளையும் ஆக்கங்களையும் அனுப்பி வைக்கலாம்.
E-mail : mathemurasu@gmail.com, editor@mathemurasu.lk
Facebook: https://web.facebook.com/mathemurasu
Youtube: https://www.youtube.com/@mathemurasu
WhatsApp Channel:

விளம்பரங்களுக்குத் தொடர்புகொள்ள : சுப்ரா – 075 168 2995

MATHEMURASU.LK All Rights Reserved – AMEND MEDIA SOLUTIONS [PVT] LIMITED, SRI LANKA.