கொழும்புவை மையமாகக் கொண்டு நடைபெறும் ‘Walk for Peace’ நிகழ்ச்சித்திட்டத்தையொட்டி விசேட போக்குவரத்து ஏற்பாட்டைச் செய்திருப்பதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (28) மாலை 04.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறுகிறது.
இதனையொட்டி முற்பகல் 11.00 மணி முதல் பின்வரும் வீதிகளில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்:
பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரை, மருதானை வீதி, நந்ததாச கோதாகொட மாவத்தை, வோர்ட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனாநாயக்க மாவத்தை, சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர மாவத்தை, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ் சந்தி, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, மலர் வீதி, பித்தளைச் சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பேபுரூக் வீதி, ஸ்டேபில் வீதி,கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகள்.
