இலங்கை அதிபர் சேவை தரம் 3 போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு

இலங்கை அதிபர் சேவை தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாளை ஏப்பிறல் (26) நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை, மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகேஇதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வி. அருள்செல்வன்