ஒவ்வொரு வருடமும் புத்தாண்டுகளை மக்கள் பெருத்த நம்பிக்கையோடு கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் தாம் எதிர்ப்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை என்ற ஏமாற்றத்துடன் தான் இன்னொரு புதுவருடத்தை எதிர்கொள்கின்றனர்
அதிலும் இந்நாட்டில் தமிழ் சமூகம், தமிழ் பேசும் சமூகம் இந்த வருடத்திலாவது தங்களுடைய அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாதா என்ற எதிர்ப்பார்ப்புடனும் உழைக்கும் வர்க்கம் தங்களுடைய உழைப்பு தங்களுக்கு சொந்தமாகாதா என்றும் மலையகப் பெருந்தோட்ட உழைப்பாளர்கள் 200 வருடமாக இரத்தம் சிந்தி உயிரைக்கொடுத்து உருவாக்கிய உடைமை தாங்களுக்குச் சொந்தமாக்கப்படாதா என்ற ஏக்கத்துடன் தான் இந்த புதுவருடத்தை எதிர்கொள்கின்றனர்
ஆகவே மக்களின் உணர்வுகளோடிணைந்து அனைத்து மக்களினதும் எதிர்ப்பார்ப்பு நிறைவு செய்கின்ற வருடமாக 2026 சித்திரை புத்தாண்டு அமையவேண்டுமென்று ஈரோஸ் ஜனநாயக முன்னணி வாழ்த்துகின்றது
இரா. ஜீவன் இராஜேந்திரன்
பொதுச்செயலாளர்
ஈரோஸ் ஜனநாயக முன்னணி
