அமெரிக்க -சமாதானப் பேச்சவார்த்தையில் உடன்பாடு நெருங்கி வந்த வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்து கெடுத்துவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
அஃது அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுக்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கொடுத்த அழைப்பு என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
திரு. வான்ஸ் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டதும் அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா போரில் அடைய முடியாததைப் பேச்சுவார்த்தையில் எட்ட முயற்சித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், திரு. வான்ஸ் இணக்கத்தை எட்டவிருந்தபோது அதை திரு. நெட்டன்யாஹு கெடுத்துவிட்டதாகவும் அந்தத் தொலைபேசி அழைப்புக்குப் பின்னரே பேச்சுவார்த்தை திசை மாறியதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
