அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் 21 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அமெரிக்க உப ஜனாதிபதி ஜே. டி.வான்ஸ் பாகிஸ்தானிலிருந்து வெறுங்கையுடன் நாடு திரும்பியுள்ளார்.
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் உடன்பாட்டிற்கு வரவில்லை. அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டனர். அணுசக்தி விவகாரம் போன்ற அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளுக்கு இணங்க ஈரான் தயாராக இல்லை .அமெரிக்கா தனது இறுதி முன்மொழிவை அளித்துவிட்டது ” என்று திரு.வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்வது ஈரானின் கையில்தான் உள்ளது . என்றும் அவர் கூறுகிறார்.
