கிழக்கிலங்கையின் மிகப் பழைமையானதும் பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு கல்லடி அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிசேகத்தினை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில், நேற்றுக் காலை 06 மணி தொடக்கம் மாலை 5.00மணி வரையில்
பெருமளவான அடியார்கள் மூலமூர்த்தி, பரிபாலன ஆலயங்களுக்கு எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது
கும்பாபிசேகம் உட்பட கிரியைகள் யாழ்ப்பாணம் காரைநகர் ஈழத்துச் சிதம்பர ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கா. துறா ஹரிச்சர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் சிறப்பாக நடத்தப்பட்டன.
இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் புண்ணியாவாசனம் கிரியைகள், வேத உபசாரங்கள் ஆரம்பமாகி பிரதான கும்ப பூஜை, விசேட யாக பூஜைகள் மங்கல வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ கும்பங்கள் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு ஆலய பரிபாலன மற்றும் மூலஸ்தான மூர்த்திகளுக்கு பக்தி பூர்வமாக
வானத்தில் கருடர்கள் வட்டமிட கும்பாபிசேகம் இடம்பெற்றது.
எஸ்.வரதராஜன் மடடக்களப்பு






