இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்கா கடல் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டள்ளதுஃ இது றிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச நில அதிர்வு ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா,தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவிதமான சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இருப்பினும், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வழமை போன்று விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
