சமாதானம் பேசுவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா ஈரானின் கார்க் தீவை அயல் நாடொன்றின் உதவியுடன் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ஈரான் எச்சரித்துள்ளது.
அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால், அந்தப் பெயர் குறிப்பிடப்படாத அயல்நாடு கடும் விளைவைச் சந்ததிக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் மொகமட் பேஹர் கலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
