மூன்று நாள்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரையில் உள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
மேலதிக எரிவாயு இருப்புகள் மாலைதீவிலுள்ள சேமிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
எரிவாயுவை ஏற்றிய கப்பல் அமெரிக்காவிலிருந்து விரைவில் மாலைதீவை வந்தடையும்.
மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவைக் கொண்ட மற்றொரு கப்பல் ஏப்ரல் 20ஆம் திகதி வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், எந்தவித இடையூறுமின்றி விநியோகத்தைத் தொடர்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக திரு. சன்ன குணவர்தன பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
