வேப்பையடி கலைமகள் ம.வி மாணவி தேசிய மட்டத்திற்குத் தெரிவு

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் அன்பழகன் அகர்சனா அவர்கள் கணித ஒலிம்பியா ட் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

இம்மாணவியைக் கற்பித்த கணிதப் பாட ஆசிரியர்கள் மற்றும் வள்ளுவம் அமைப்பினரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் கே.தியாகராஜா தலைமையில்செவ்வாய்க்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது.

சா. நடனசபேசன்