பத்தனையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்து மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் திம்புல பத்தனை சந்திப்பில் இன்று (20) காலை 7:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த இரு பயணிகளே விபத்தில் பாதிக்கப்பட்டனர்.
படுகாயமடைந்த பயணி கொட்டகலை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
டயகமவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தின் ஓட்டுநர் ஓய்வெடுக்க எதிர் திசையில் பேருந்தை நிறுத்தியபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் பயணித்த இரு பயணிகள் பின்புற இறங்கு வழி கதவிலிருந்து பிரதான வீதிக்கு வந்தபோது நாத்தண்டியாவிலிருந்து நுவரெலியாவுக்கு அரிசி ஏற்றிச் சென்ற லொறி அவர்களை மோதியுள்ளது..
கௌசல்யா
