சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கை வந்திருந்த மருத்து:வக் குழு அதன் பணிகளை நிறைவுசெய்து கொண்டு நேற்று (14) நாடு திரும்பியது.
தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவென 78பேர் கொண்ட இந்திய இராணுவ மருத்துவப் பரிவினர் இலங்கை வந்திருந்தனர்.
மஹியங்களை பகுதியில் மருத்துவமனையை ஸ்தாபித்திருந்த இந்தியக் குழு சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமான நோயாளர்களுக்குச் சிகிச்சை அளித்துள்ளது.
மருத்துவமனையிப் செயற்பாடுகளை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இந்தக் குழுவை அழைத்துச் செல்வதற்காக நேற்று வந்த சீ17 விமானம் 25 தொன் பொருள்களையும் கொண்டு வந்தது.
அதில் 10 தொன் அத்தியாவசிய மருந்துகளும் 15 தொன் உலருணவுப் பொருள்களும் அடங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கட்டுநாயக்க விமான நிலையம் சென்று நன்றி தெரிவித்து இந்தியக் குழுவினரை வழியனுப்பிவைத்துவைத்தார்.





