அனர்த்த நிலையைக் கையாளவே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency)

அனர்த்த நிலையைக் கையாள்வே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency) பிரகடனம்! செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சில தமிழ் ஊடகங்கள் அவசரகாலச் சட்டம் (Emergency Law) பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டில் அவசரகால நிலையே பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் நிலைமைகளைக் கையாள்வதற்கான சட்டப் பாதுகாப்பை வழங்கும் பொருட்டு இந்த அவசரகால நிலை பயன்படும் என்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.