மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர் விநியோகத்தில் கடந்த இரண்டு நாள்களாகத் தடை ஏற்பட்டுள்ளது.
நேற்றுக் காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தின் அநேகமான பகுதிகளிலும் மின்சாரமும் குடிநீரும் இன்றி மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
துறைநீலாவணை, பெரியநீலாவணை, மருதுமுனை, கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சாய்ந்தமருது, காரைதீவு உட்பட பல பகுதிகளில் மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
மட்டக்களப்பு ஆரையம்பதி முதல் அம்பாறை வரை நேற்று முதல் முற்றாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
நடனசபேசன்
