பாடசாலை நேர நீடிப்புக்கு ஜேவிபி தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாடசாலை நேரம் காலை 7.30 முதல் பிற்ககல் 1.30 வரை என்ற வரையறை நீடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியுடன் ஒன்றிணைந்துள்ள இலங்கை ஆசிரிய சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தச் சங்கம் டிசம்பர் 12 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஆசிரிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது. என்றாலும், பாடசாலை நேர நீடிப்புக்குத் தமது எதிர்ப்பை அரசாங்கத்திற்கு அறிவித்திருக்கிறது.
இது தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து மகஜர் கையளித்திருப்பதாக இலங்கை ஆசிரிய சேவைச் சங்கத்தின் தலைவர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
