மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாத்தளை மகாத்மா காந்தி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி மஞ்சுளா சந்திரசேகரம் பிள்ளை தலைமையில் வெகு விமர்சையாக விழா நடைபெற்றது.
முற்பகல் 9 மணி அளவில் விழா ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2:30 மணி அளவில் முடிவுற்றது.
இப்பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசன் நிஷாந்தன், சிறப்பு அதிதியாக கல்லூரியின் பழைய மாணவியும் NSBM Green பல்கலைக்கழகத்தின் சிருஷ்ட விரிவுரையாளருமான மிருணா ரவீந்திர குமார் ஆகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
மாணவர்களுக்கான ஊக்குவிப்பு உரைகளையும் ஆற்றியதோடு கல்லூரியின் அதிபர் பிரதி உப அதிபர்களையும் ஆசிரியர்களையும் நிகழ்வை ஒட்டி பாராட்டினர்.
பரிசளிப்பு விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
பன்விலை நிருபர் ம.நவநீதன்








