இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு

காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பணயக்கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.

செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பணயக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன்படி, ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேலியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.