அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இந்த சந்திப்பு இன்று (11) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.. 

முன்னர் இருந்த முறைகேடுகளை மாற்றி முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்தச் சூழலை மேலும் பலப்படுத்த வெளிப்படையான புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அந்தக் குழுவுக்கு விளக்கமளித்துள்ளார். 

நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், அவர் சுட்டிகாட்டியுள்ளார். 

அதற்காக, இனவாதம், மதவாதம் எனபவற்றை ஒதுக்கி தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், செயற்திறனான அரச சேவையை உருவாக்குதல், வெளிப்படையான இராஜதந்திர உறவுகள், டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றின் நோக்கங்களை அடைவதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.