ஒரு ரூபாய்க்கூட சம்பளம் வேண்டாம்!

மண் வாசனையுடன் கூடிய ‘மருதம்’ படத்தில், கிராமத்துப் பெண்ணாக, ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்துள்ள ரக்‌ஷனா ஒரு ரூபாய்க்கூட சம்பளம் வேண்டாம்! கூறியுள்ளார்.

மார்கழி திங்கள்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் இவர்.

அப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் பாரதிராஜாவை படப்பிடிப்பில் முதல் முறை சந்தித்தபோது, ‘சிறந்த நடிகையாக வரவேண்டும்’ என்று வாழ்த்தியதுடன், ‘ரக்‌ஷனா’ எனப் பெயரும் சூட்டியுள்ளார்.

“பாரதிராஜா பெயர்சூட்டிய நடிகைகள் அனைவருமே தமிழ் சினிமாவில் பெரிய அளவில் சாதித்தவர்கள். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி.

“படப்பிடிப்பின்போது எனக்குப் பலமுறை நடிக்கச் சொல்லிக் கொடுத்தார். கிராமத்துப் பெண்ணின் நுட்பமாக நளினம், எதார்த்தமான பேச்சு குறித்தும் விரிவாக விளக்கினார்.

சில சமயங்களில் நடித்தும் காட்டுவார். அவருக்கு மானசீகமாக நன்றி சொல்லிக்கொள்கிறேன்,” என்கிறார் ரக்‌ஷனா.

இளம் வயதிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாக நடிப்பது வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக அமைந்துவிடாதா என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு இவரது ஒரே பதில், ‘கதைக்குத் தேவைப்பட்டதால் நடித்தேன்’ என்பதுதான்.

இதற்கு முன்பு ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடித்ததைச் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அதில் தனக்குரிய கதாபாத்திரம் நன்றாக உள்ளதா என்பதற்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் சொல்கிறார்.

கதையும் கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் போதும். மற்ற அம்சங்கள் குறித்து அதிகம் யோசிக்க வேண்டியதில்லை.

ஒரு கதையைக் கேட்கத் தொடங்கிய உடனேயே அது மனதில் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேபோல், கேட்டு முடித்ததும் இன்ன கதாபாத்திரம்தான் நமக்கு ஏற்றது என்று நம் உள்ளுணர்வு உணர்த்தும்,” என்று அனுபவம் வாய்ந்த நடிகையைப் போல் பேசுகிறார் ரக்‌ஷனா.

எல்லா நடிகர்களுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்று ஒரு ரூபாய்க்கூட சம்பளம் வேண்டாம்! என்ற இந்த நடிகை கூறியுள்ளார்.