புது நாயகிகளின் வரவால் களைகட்டும் தமிழ்ச் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எந்த மொழி நடிகையாக இருந்தாலும், ‘தமிழ் ரசிகர்களின் அன்பு அலாதியானது’, ‘தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை’ என்று தங்களுடைய பேட்டிகளில் குறிப்பிடத் தவறுவதில்லை. உண்மையும் அதுதான்.
எந்த மொழி நடிகையாக இருந்தாலும், ‘தமிழ் ரசிகர்களின் அன்பு அலாதியானது’, ‘தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை’ என்று தங்களுடைய பேட்டிகளில் குறிப்பிடத் தவறுவதில்லை. உண்மையும் அதுதான்.
பல மொழிகளில் முன்னணி நாயகிகளாக இப்போது வலம்வரும் நடிகைகள் பலரும் ஏற்கெனவே தமிழில் அறிமுகமானவர்கள்தான்.
கோடம்பாக்கத்தில் கால்பதித்தால் ஹாலிவுட் வரை கோலோச்சலாம் என்ற அசாத்தியமான நம்பிக்கை நடிகைகள் மத்தியில் நிலவுவதில் ஆச்சரியமில்லை.
பிரியங்கா சோப்ராவும்கூட தமிழில் நடித்த பிறகு இந்தியில் பிரபலமாகி, இப்போது ஹாலிவுட்டில் அசத்தி வருகிறார்.
இந்த ஆண்டு வழக்கம்போல் புது நாயகிகளின் வரவு கோடம்பாக்கத்தைக் களைகட்ட வைத்துள்ளது. தீவிர சினிமா ரசிகர்களுக்காக அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள்.
சைத்ரா
இவர் பிறந்தது, வசிப்பது பெங்களூரில் என்றாலும் தமிழில் சரளமாகப் பேசுவார். நல்ல பாடகியும்கூட.
நடிப்புக்கு அடுத்தபடியாக பாடகியாகவும் ‘சர்வஜனிகரிகே சுவர்ணவகஷா’ கன்னடப் படத்துக்காக ஒரு விருதைப் பெற்றுள்ளார்.
தமிழில் ‘3BHK’ படத்தில் நடித்துள்ள இவர், முறைப்படி நடனம் கற்றுக்கொண்டவர். அடுத்து, தமிழில் சசிகுமாருடன் ‘மை லார்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளாராம்.
இது ராஜு முருகன் இயக்கியுள்ள படம். விரைவில் தமிழிலும் தனது பாடலும் குரலும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் என்கிறார் சைத்ரா.
கயாது லோஹர்
பிரதீப் ரங்கநாதனுடன் ‘டிராகன்’ படத்தில் நடித்த கயாது லோஹர்தான் தற்போது இளையர்களின் புதிய கனவுக்கன்னி எனலாம்.
இவரைக் கோடம்பாக்கத்துக்கு அழைத்துவந்த பெருமை ‘இதயம் முரளி’ பட இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனைத்தான் சேரும்.
புது நாயகிகளின் வரவால் களைகட்டும் தமிழ்ச் சினிமா தொடர்ந்து பல சாதனைகளைப் புரியும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

