2026 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சபையில் இன்று (26) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தை நிதி, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்திப் பதில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று சபையில் சமர்ப்பித்தார்.
நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 18ஆம் திகதி வெளியானது.
அதற்கமைய அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவினம் 4 இலட்சத்து 43 ஆயிரத்து 400 கோடியாகும்.
இதில் கூடுதலான தொகை நிதி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சுக்கு 63 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையை நவம்பர் 7ஆம் திகதி நிகழ்த்துவார். நவம்பர் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஆறு நாள் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.
குழுநிலை விவாதம் நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 5 ஆம் திகதிவரை நடைபெறும்.
2026 நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சபையில் இன்று சமர்ப்பிக்கப்படுவதுடன் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி நடைபெறும்.
ஜீவிதன்
