முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாகப் பேசுவோர் வாய் கவனம்! என்றும் அவர்கள் கூறும் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பில் முடியும் என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே. டி. லால்காந்த எச்சரித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை குறித்துப் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சட்டம் சரியாக அமல்படுத்தப்படும் வேளையில் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.
அவர்களின் விமர்சனம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் என்பதை அவர்கள் உணர்ந்து வாயைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். உதிர்க்கும் சொற்களைக் கவனமாக உதிர்க்க வேண்டும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
