பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்

ஹங்வெல்ல துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல, துன்னான பகுதியில் நேற்று (13) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் துன்னான பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ சந்தேக நபர்கள் தொடர்பான தகவலோ இன்னும் வெளியாகவில்லை. ஹங்வெல்ல பொலிஸ் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.