இந்தியாவின் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயம் - படம்: ஊடகம்
இந்தியாவின் கேரளாவில் உள்ள சபரிமலை யாத்திரைக்கு அரச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஐயப்ப பக்தர்களின் நீண்கால கோரிக்கைக்கு அமைய சபரிமலை ஐயப்ப யாத்திரைக்கு நேற்று (12) முதல் அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகப் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
புத்தசாசன, கலாசார அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய சபரிமலை ஐயப்ப யாத்திரையை ஒரு புனித யாத்திரையாக அரசு அங்கீகரித்துள்ளது.
ஐயப்ப யாத்திரை ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நடைபெறும். இலங்கையிலிருந்து சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள்.
யாத்திரையை அரசு அங்கீகரித்திருப்பதால், சபரிமலை செல்வோருக்கு அரசு சில சலுகைகளை வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

