பொரளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் பொரளை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (09) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொரளை, சஹஸ்புர விளையாட்டு மைதானத்தை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் குழு மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஐவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் உடனடியாக உயிரிழந்தார்.
மற்றொருவர் சிகிச்சை பலனின்றிச் சற்றுத் தாமதித்து உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் மூவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
