குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் மரணம் அடைந்த சம்பவமொன்று இன்று (08) மதியம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.
குளவிக் கொட்டுக்கு இலக்கான நபர் வைத்திய சாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் மரணம் அடைந்துள்ளார்.
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் சாமி மலை ஹொரன பெருந் தோட்ட மார்க்கத்திற்கு உரித்தான ஓல்ட்டன் தோட்ட கிங்கோரா பிரிவைச் சேர்ந்த சிவா கனகரட்ணம் எனும் 36 வயது நிரம்பியவராவார்.
இவர் இன்று மதியம் தான் வளர்க்கும் பசுவிற்குப் புல் வெட்டிக் கொண்டு குடிநீர்க் குழாய் செப்பனிட சென்ற வேளையில் அதி விஷமுள்ள குளவி கொட்டுக்கு இலக்கானார்.
உடனடியாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் மரணித்துள்ளார்.
இவரது சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மஸ்கெலியா பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.செ. தி. பெருமாள்
