இன்றும் மழையுடனான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
மேல், சப்பிரகமுவை மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
