பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்

உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இன்று (31) காலை கொஸ்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்டவர் கொஸ்கொட, துவேமோதர பகுதியைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய இளைஞர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த இளைஞர் தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை ஐந்து 15 அளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.