ஜேவிபி பிரதேச சபை உறுப்பினர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 4.40 அளவில் அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
பிரதேச சபை உறுப்பினருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால், அவரது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
வீட்டின் முன் கதவை நோக்கித் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

