பஸ் கட்டணக் குறைப்பு இன்று முதல்

பஸ் கட்டணக் குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
வருடாந்த கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளன.
தேசிய போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறைந்தபட்ச பொது சேவை பேருந்து கட்டணமான ரூ. 27, இரண்டாவது கட்டணமான ரூ. 35 மற்றும் மூன்றாவது கட்டணமான ரூ. 45 ஆகியவற்றில் மாற்றமில்லை எனத் தெரிவித்துள்ளது.
புதிய திருத்தத்தின் படி, ரூ. 56, 77, 87, 117, 136, 141 போன்ற கட்டணங்கள் ரூ. 1 குறைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், சில கட்டணங்கள் ரூ. 2 அல்லது ரூ. 3 வீதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதிகபட்ச பொது சேவை கட்டணமான ரூ. 2170 இல் ரூ. 11 குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஸ் கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலாகுவதுடன் பொது சேவைகள், அரை சொகுசு, அதிசொகுசு சேவைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் இயங்கும் அனைத்து வகை பேருந்துகளுக்கும் பொருந்தும் எனத் தேசிய போக்குவரத்து ஆணையம் செப்பியுள்ளது.
