14 பில்லியன் பெறுமதியான கிராமிய வீதி அபிவிருத்தி திட்டங்கள்

14 பில்லியன் பெறுமதியான கிராமிய வீதி அபிவிருத்தி திட்டங்கள்

14 பில்லியன் பெறுீதி மதியான கிராமிய வீதி அபிவிருத்தி திட்டங்கள் இன்று நாடளாவிய ரீதியில் அங்குராரப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

அடையாள அங்குரார்ப்பண நிகழ்ச்சி கொஸ்க – புஸ்ஸல்ல பகுதியில் நடைபெற்றது. அதனோடு இணைந்ததாக நாடு முழுவதும் 57 இடங்களில் வீதி அபிவிருத்திப் பணிகள் தொடங்கப்பட்டன.

நாடு முழுவதும் 1800 கிராமிய வீதிகளைச் செப்பனிட 14 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் முதற்கட்டமாக 67 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிராமிய அபிவிருத்திக்னெ மேலும் ஐந்து பில்லியன் ரூபாய் ஒதுக்கப்ப்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த அரசாங்கங்கள் வீதி அபிவிருத்தியில் பெரும் ஊழல் புரிந்ததாக விமர்சித்தார்.

நாட்டின் சனத்தொகையில் 70 வீதமான மக்கள் கிராமங்களிலேயே வாழ்வதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025