உலப்பனை சுமங்கல தேரரிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
விகாரமகாதேவி பூங்காவில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக உலப்பனை சுமங்கல தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலப்பனை சுமங்கல தேரர் பணியாற்றும் நாரஹேன்பிட்டிய டட்லி சேனாநாயக்க வித்தியாலயத்தில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
