உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர், சிறுவர் விவகார அமைச்சு தேசிய வாரத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இன்று முதல் (25) முதல் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், “மனத்தில் வலிமை – சிறுவர்களின் வளம்” எனும் கருப்பொருளின் கீழ் இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் நடைமுறைப்படுத் தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஆர்.இரவீந்திரன்
