102 வயது மூதாட்டியின் சாதனை!

102 வயது மூதாட்டியின் சாதனை உலக அளவில் பேசப்படுகிறது

கனடா நாட்டைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் புதிய சர்வதேச பாலத்தை நடந்து கடந்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் உலக அளவில் வைரலாகி வருகிறது. பாலத்தில் நடக்கத் தொடங்கியபோது, அவரது நண்பர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். ஆனால், “நானே நடக்கிறேன், எனக்கு எந்த உதவியும் வேண்டாம். நான் தடுமாறினால் மட்டும் அருகில் இருங்கள்” என்று கூறி, ஒட்டுமொத்த குழுவையும் அவரே முன்னின்று வழிநடத்திச் சென்றார்.

பாலத்தின் மேல் ஏறுவது கடினமான மேடாக இருந்தபோதிலும், அவர் சற்றும் சோர்வடையாமல் நடந்து காட்டியது அங்கு வந்திருந்த மற்ற பாதசாரிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.