அம்பேபுஸ்ஸை – அலவ்வை இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பேபுஸ்ஸை – அலவ்வை ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணித்த ரயிலொன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த மார்க்கத்தில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படக்கூடும் எனப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
