ஒரு பகுதியில் வெயில் மறு பகுதியில் மழை பெய்யும் காலநிலை இன்று நிலவும்.
மழையும் வெயிலும் நிறைந்த காலநிலை இன்று (31) நாட்டில் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இன்று (31) மேல், சபரகமுவை, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி , மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அநுராதபுரம், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
