கற்பிட்டியில் நாலாயிரம் சங்குகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பிரதேசத்தில் வீடொன்றில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குக் கடல் மார்க்கமாக கொண்டு செல்வதற்காக களஞ்யப்படுத்தப்படிருந்ததாக சந்தேகிக்கப்படும் கடல் சங்கு 44 மூடைகளுடன் சந்தேக நபர் ஒருவரை வியாழக்கிழமை (30) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் செயல்பட்டு வரும் எஸ் எஸ் பெர்னாண்டோ தலைமையிலான விஷேட போதை தடுப்பு பிரிவினரால் இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட சங்குகளின் பெறுமதி பல இலட்சம் எனவும் சுமார் 4000 சங்குகளுக்கு மேல் காணப்படும் எனவும் தெரியவருகிறது.
இதன் பிரதான உரிமையாளர் தலைமறைவாகி உள்ளதாகவும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் இவ் விஷேட பொலிஸ் குழுவின் தலைமை அதிகாரி எஸ் எஸ் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்
