உயர் தரத்தில் தொழிற்கல்விப் பிரிவில் கற்பதற்கு விண்ணப்பம் கோரல்

கல்வி, உயர்கல்வி,தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026/2027 கல்வியாண்டிற்காக அரசுப் பாடசாலைகளில் தொழிற்பயிற்சி பிரிவிற்கான (Vocational Stream) தரம் 12 மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சையில் தோற்றியிருக்க வேண்டும். சித்தியடைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மாணவர்கள் தரம் 12,13 ஆகிய வகுப்புகளில் இரண்டு ஆண்டுகள் கல்வி கற்று, பின்னர் தேசிய தொழிற்தகைமைச் சான்றிதழ் NVQ நிலை 4 பெறக்கூடிய வாய்ப்பைப் பெறுவர்.

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா.த.) பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் தரம் 12 இற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பொதுப் பாடங்களுடன் தொழில்துறை சார்ந்த அறிவும் நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படும். மேலும், NVQ நிலை 4 தகைமையின் மூலம் உயர்கல்வி,தொழில்வாய்ப்புகளுக்கான பாதையும் திறக்கப்படுகின்றது.

பின்வரும் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன:

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்
சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்பு
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT)
கலை மற்றும் ஊடகக் கற்கைகள்
கட்டடத் தொழில்நுட்பம்
இயந்திர மற்றும் உற்பத்தித் தொழில்நுட்பம்
மின்சாரம் மற்றும் மின்னணுவியல்
வேளாண்மை
அழகு பராமரிப்பு
ஆடை மற்றும் நெசவுத் தொழில்நுட்பம்
சுற்றுச்சூழல் கற்கைகள் உள்ளிட்ட பல துறைகள்

இப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் NVQ 4 தகைமையுடன் தொழில்வாய்ப்புகளைப் பெறுவதோடு, மேலதிக தொழிற்கல்வி, உயர்கல்வி வாய்ப்புகளையும் தொடர முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழிற்பயிற்சி பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது பாடசாலை அதிபர்களை அல்லது அருகிலுள்ள கல்வி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு மேலதிகத் தகவல்களைப் பெறலாம்.

அல்லது அவ்விண்ணப்பப் படிவத்தை https://www.doenets.lk/ இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

எஸ்.ஆர்.இரவீந்திரன்