கொழும்பு புறநகர்ப் பகுதிகள் சிலவற்றில் நாளை (24) மாலை ஆறு மணி முதல் மறுநாள் (25) மாலை ஆறு மணி வரையிலான 24 மணித்தியால நீர்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
லபுகமை – கலட்டுவாவையிருந்து மஹரகமை வரையிலான பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிக நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல்,வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதற்கமைய, கலகெதரை, ஹோமகமை, கொட்டாவை, பன்னிப்பிட்டி, பெலன்வத்தை,மஹரகமை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோக தடை ஏற்படவுள்ளது.
